அக்ரி இந்தியா ஹேக்கத்தான் என்பது உரையாடல்களை உருவாக்குவதற்கும், விவசாயத்தில் புதுமைகளை விரைவுபடுத்துவதற்கும் மிகப்பெரிய மெய்நிகர் கூட்டம் ஆகும். அக்ரி இந்தியா ஹேக்கத்தான், பூசா கிரிஷி, ICAR - இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) & வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட கவர்ச்சிகரமான பொம்மை அடிப்படையிலான விளையாட்டை உருவாக்க 'ஆத்மனிர்பர் டாய்ஸ் இன்னோவேஷன் சேலஞ்ச்' உங்களை வரவேற்கிறது. பொம்மைகளும், விளையாட்டுக்களும் குழந்தைகளுக்குச் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் மதிப்புகளைப் பற்றிப் பயிற்றுவிக்கும் ஒரு மகிழ்வான வழிமுறையாகும்.
மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2020 (DDH2020) தளம் கோவிட் -19 க்கு எதிரான திறந்த மூல மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தானில் சேர விரும்பும் அனைவரையும் வரவேற்கிறது. DDH2020 என்பது AICTE, CSIR ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இதற்கு இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், NIC மற்றும் மைகவ் ஆகியவை ஆதரவளிக்கின்றன.
அனைவருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் மூலம், இந்தியாவை ஒரு சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுசார் சமூகமாக மாற்றுவதற்கு நேரடியாக பங்களிக்கும் இந்திய பண்பாட்டில் வேரூன்றிய ஒரு கல்வி முறையை இந்த தேசிய கல்விக் கொள்கை கற்பனை செய்கிறது.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளின் இரண்டு ஆண்டு நினைவு காலத்தின் ஒரு பகுதியாக, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் புகைப்படப் போட்டியை ஏற்பாடு செய்கிறது. "உழைப்பின் கண்ணியம், ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்பது இந்தப் போட்டியின் முக்கிய கருப்பொருளாகும்.
தேசிய கல்விக் கொள்கை (NEP), 2020 29 ஜூலை 2020 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. NEP 2020 என்பது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும், இது நமது நாட்டின் வளர்ந்து வரும் பல வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரல்.